இதனை அடுத்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, துணை கண்காணிப்பாளர் கீதா, நகர்மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் மற்றும் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், நகராட்சி சுகாதார அலுவலர்கள் அசன் அகமது, சேகர் ஆகியோர் தலைமையிலான சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இன்று காலை சாலையில் சுற்றித்திரிந்த 4 மாடுகள் மற்று 5 கன்று குட்டிகள் என 9 மாடுகளை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த தகவலை அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் கூடி, மாடுகளை பிடித்து எதிர்ப்பு தெரிவித்தனர் இந்த எதிர்ப்பையும் மீறி , பிடிபட்ட 9 மாடுகள் காவல்துறையினரின் உதவியுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள கோசாலைக்கு அனுப்பப்பட்டது. நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய காவல் துறையினருக்கும் நகராட்சி நிர்வாகத்தினருக்கும் பெரியகுளம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment