உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மாபெரும் கிரிக்கெட் போட்டி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 21 November 2022

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மாபெரும் கிரிக்கெட் போட்டி.


தேனி மாவட்டம், பெரியகுளம் விக்டோரியா அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு,  மா பெரும்கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் துவக்க விழாவில்,  தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ் செல்வன்  தலைமை தாங்கி துவக்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தி பேசினார். 

நிகழ்வில், வடக்கு மாவட்ட அவை தலைவர் செல்ல பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல்,  நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், நகரச் செயலாளர் முகமது இலியாஸ்,  தாமரைக் குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ்,மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் முருகன், தென்கரைப் பேரூர் செயலாளர் பாலமுருகன், வடுகபட்டி பேரூர் செயலாளர் காசி விஸ்வநாதன், நகர்மன்ற பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், திமுக ஒன்றிய நகர பேரூர் கிளை பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

இந்த கிரிக்கெட் விளையாட்டு போட்டியினை திராவிடன், ராம்ஜி, தினேஷ், ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். தொடர்ந்து ஒரு வார காலம் நடைபெறும் இந்த போட்டியில் 16க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad