தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையத்தில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அவர்களின் ஆணைக்கிணங்க பள்ளி மாணவிகளுக்கு காவல் நிலையத்தின் செயல்பாடுகள் காவல்துறையினரின் நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் விழிப்புணர்வு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமில் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல் ஆய்வாளர் மீனாட்சி விளக்கிப் பேசினார்.
சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன் பயிற்சி சார்பு ஆய்வாளர்கள் கவிதா, லதா மற்றும் அரசு பள்ளி ஆசிரியைகள் மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர். நிகழ்வில் மாணவிகளின் பார்வைக்காக துப்பாக்கிகள், ஒலிபெருக்கி, வாக்கி டாக்கி புல்லட் உள்ளிட்டவைகளை பார்வைக்காக வைக்கப்பட்டன.

No comments:
Post a Comment