பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 21 November 2022

பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார்  மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் சேர்த்தல் நீக்கல், திருத்தல் முகாம்களில் பெரியகுளம் நகர் பகுதி முழுவதும் 30 வார்டுகளிலும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று  களப்பணி ஆற்ற வேண்டுமெனவும், அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒருங்கிணைந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டுமெனவும், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக நிர்வாகிகள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை திறம்பட செய்திட வேண்டுமென கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகரச் செயலாளர் அப்துல் சமது தலைமை தாங்கினார், இந்நிகழ்வில்அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ. சண்முகசுந்தரம், மாவட்ட கழக இணைச் செயலாளர் மஞ்சுளாமுருகன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அபுதாஹிர், மாவட்ட பிரதிநிதி அன்பு, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகானந்தம், நகர பொருளாளர் காமராஜ், விவசாய அணி செயலாளர் ஜெயப்பிரகாஷ், கண்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜாமுத்து, நகர இலக்கிய அணி செயலாளர் முகமது சலீம், நகரமன்ற உறுப்பினர்கள் குருசாமி, சத்யா கிருஷ்ணவேணி, வார்டு செயலாளர்கள் செல்லம், ராஜ்,  ஸ்ரீதர், சிவக்குமார், தமீம் அன்சாரி, பழனிச்சாமி, முத்துக்குமார், கதிரேசன், ராஜ், நந்தகுமார், முத்துப்பாண்டி, ஆவின்முருகன், சக்தி அய்யனார், ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ரங்கராஜ் மற்றும் நகரக்கழக வார்டு, மகளிர் அணி, நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad