தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருப்பூர் அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் கனிஷ்கா சிவக்குமார் மற்றும் இபிஎஸ் ஆதரவாளரான தாராபுரம் நகர செயலாளர் காமராஜ் முன்னிலையில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வத்தை சந்தித்த திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ஓபிஎஸ் வாழ்க ஓபிஎஸ் வாழ்க வருங்கால முதல்வர் வாழ்க என கோஷங்கள் எழுப்பி அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூ கொத்துகள் கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் ஓபிஎஸ்சை சந்திக்க வந்த திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்ததால் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment