தேனி பி.சி. பட்டி பகுதியில அமைந்துள்ள அரசு மதுபான கடை பொதுமக்களுக்கு இடையூறாகவும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும் இடையூறாக அமைந்துள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் குடி மகன்களின் அத்துமீறல் அதிகமாக இருந்து வருவதாகவும் அதனால் அரசு மதுபான கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து பல மாதங்களாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தற்போது சிவசேனா கட்சியின் மாநிலச் செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் அரசு மதுபான கடையை முற்றுகை இட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விரைந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மதுபான கடையை அடைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்தனர்.
- செய்தியாளர் எம்.சேதுராமன்

No comments:
Post a Comment