பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனுஸ்மிருதி நூலை சமஸ்கிருதத்திலிருந்து தமிழாக்கம் செய்து பொதுமக்களுக்கு விநியோகம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 November 2022

பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனுஸ்மிருதி நூலை சமஸ்கிருதத்திலிருந்து தமிழாக்கம் செய்து பொதுமக்களுக்கு விநியோகம்.

மனுஸ்மிருதி என்று சொல்லக்கூடிய சமஸ்கிருத நூலை தமிழாக்கம் செய்து விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தமிழகம் முழுவதும் பல லட்சம் பிரதிகளை அச்சிட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர் அதன் அடிப்படையில், தேனி மாவட்டம்  பெரியகுளம்  தென்கரை காந்தி சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இரா தமிழ்வாணன் தலைமையில் நகரச் செயலாளர் ஜோதி முருகன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர் திராவிட கலகம் பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன் பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர் பிரேம்குமார் நகரத் துணைச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட  விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் நிர்வாகிகள்  பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி நூலை விநியோகம் செய்தனர்.


மனுஸ்மிருதி என்பது பெண்களை இழிவுபடுத்தக்கூடிய மற்றும் சூத்திரர்களை இழிவுபடுத்தக்கூடிய ஒரு நூலாகும் சமஸ்கிருதத்தில் அச்சிடப்பட்டு இருந்ததை விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் தமிழ் மொழியாக்கம் செய்து அனைவரும் தமிழ் மொழியில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அந்தக் புத்தகத்தில் உள்ள விளக்கங்களை எடுத்துக் கூறி விநியோகம் செய்தனர்.


இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இரா தமிழ்வாணன் கூறுகையில், மனுஸ்மிருதி நூலில் கூறப்பட்டிருப் பதாவது  மனுஸ்மிருதியினுடைய கருப்பொருள் வர்ணாசிரமம் அதன்  அடிப்படையில் உயர்வு தாழ்வு வருகின்றது அதன் அடிப்படையில் பாகுபாடு வருகிறது பாகுபாட்டின் அடிப்படையில் உழைப்பு சுரண்டல் வருகிறது உழைப்பு சுரண்டலுக்கான மூல கோட்பாடு ஆவணம் தான் மனுஸ்மிருதி இந்த நூலில் பெண்களை அடிமைப்படுத்து நோக்கி பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. 


அதில் மனைவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கணவன் உணவு உண்ணக்கூடாது வீடு விருத்தி ஆகாது அது சந்ததி பாதிக்கும் மனைவி கணவனுக்கு உணவு பரிமாறும் பொழுது கையால் பரிமாறக்கூடாது கணவனின் பாதத்தை பூஜித்த பின்பு தான் மனைவி உணவு உண்ண வேண்டும். 


மேலும் கணவன் சாப்பிட்ட மீதி உணவைத்தான் மனைவி உணவாக உட்கொள்ள வேண்டும் கணவனை விட்டுவிட்டு மனைவி உணவு உண்ணக்கூடாது பெண்கள் மாதவிடாய் காலத்தில் சமையலறைக்குள் செல்லக்கூடாது அவ்வாறு மீறிச் சென்றால் அடுத்த தலைமுறையை பாதிக்கும் எனவும் கணவன் இறந்தவுடன் அக்னி பிரவேசம் செய்கின்றாரோ அவள் அருந்ததிக்கு சமமானவள் என கருதப்பட்டது சொர்க்கலோகத்தில் சிறப்படைகின்றாள் என்று கூறப்பட்டு இருக்கின்றது.


அதைக் கண்டித்து தான் தந்தை பெரியார் இந்த  புத்தகத்தை எரித்தார் பெண்களுக்கு சம உரிமை வேண்டுமென்று மேலும்   பெண்கள் மற்றும் சூத்திரர்களுக்கு எதிரான மனுஸ்மிருதி நூலில் உள்ள விளக்கங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக இன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மனுஸ்மிருதி நூலை வெளியிட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad