தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரை குளத்தில் அமைந்துள்ள ஜெயராஜ் அன்ன பாக்கியம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று மரக்கன்று நடுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வினை ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி நாட்டு நல பணித்திட்டம் அலகு 10 மற்றும் பெரியகுளம் மாங்கனி அரிமா சங்கம் சார்பில் நடைபெற்றது.
இந்த மரக்கன்று நடுவிழா நிகழ்ச்சியில், ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முதல்வர் சேசுராணி தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் குயின்ஸ்லி ஜெயந்தி முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பெரியகுளம் மாங்கனி அரிமா சங்க தலைவர் ராமநாதன், செயலாளர் ரமணி குமார், பொருளாளர் நித்தியானந்தம் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள், கல்லூரி மாணவியர் என ஏராளமானோர் திரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
மேலும், இயற்கையை பாதுகாப்பது குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். நிகழ்வில், முன்னதாக கல்லூரி நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரும் மற்றும் வரலாற்று துறை உதவி பேராசிரியருமான பத்மஸ்ரீ வரவேற்புரை ஆற்றினார் . வரலாற்று துறை உதவி பேராசிரியை தமிழ்ச்செல்வி அனைவருக்கும் நன்றி உரையாற்றினார்.
No comments:
Post a Comment