தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட தெ.கள்ளிப்பட்டி தண்ணீர் துறை தெருவில் முத்து, ஆண்டிச்சியம்மாள் ஆகியோர் குடியிருப்பு கட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள இடத்திற்கு சொந்தக்காரரான சுந்தரவடிவேல் என்கிற நபர், ஆண்டிச்சி அம்மாள் குடியிருந்து வரும் வீடு நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனவும் நெடுஞ்சாலை துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு தனிப்பட்ட புகார் மனு அளித்துள்ளார்.

இதனை அடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த குடியிருப்பினை நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய் துறையினர் காவல் துறையினர் ஒருங்கிணைந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். குடியிருந்த வீட்டை இடித்து தள்ளிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ் புலிகள் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், (எம்.எல்)கம்யூனிஸ்ட் கட்சி,திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணிக்காக துணைக் கண்காணிப்பாளர் கீதா தலைமையிலான காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment