தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை டீ கல்லுப்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா இவர் தண்ணீர் துரை தெருவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் இந்நிலையில் இவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரி துணையோடு வீடு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

இந்நிலையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக தான் குடியிருந்து வரும் வீட்டிற்கு சொத்து வரி மின்சார வரி குடிநீர் வரையென அனைத்தும் கட்டப்பட்டு வருவதாகவும் திட்டமிட்டு தனது வீட்டை இடித்து தள்ளிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரியகுளம் அருகே உள்ள தாமரை குளத்தில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் இளையராஜா தனது குடும்பத்தினரும் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் இளையராஜா தனது கோரிக்கை மனுவை யார் ஆட்சியரிடம் வழங்கினார் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தை கட்சியை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் தொழிலாளர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment