தேனி மாவட்டம் தேனியில் என்.ஆர்.டி கல்யாண மண்டபத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மூளை பாதுகாப்பிற்கான சிறப்பு கருத்தரங்கம் என்.ஆர்.டி.திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் விஜய் டிவி புகழ் மதுரை முத்து, சன் டிவி புகழ் கோவில்பட்டி அன்ன பாரதி மற்றும் பேச்சாளர்கள் பாப்பாத்தி, முருகேஸ்வரி, விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நரம்பியலும் நாமும் என்ற தலைப்பில் பேசினார்கள், கருத்தரங்கில் டாக்டர்கள் விஜய் ஆனந்த், நரேந்திரன், மற்றும் தேனி மாவட்ட முக்கிய பிரமுகர்கள் நாடார் சரஸ்வதி தலைவர் ராஜ்மோகன், ராஜேஷ், பெரியகுளம் அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி மருத்துவமனை முதுநிலை மேலாளர் பாண்டியராஜன் தலைமையிலான குழுவினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment