ஆண்டிபட்டி தி.மு.க பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 28 November 2022

ஆண்டிபட்டி தி.மு.க பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு.


ஆண்டிபட்டி  பேரூராட்சியில் மாதந்திரக்கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தமுள்ள 18 கவுன்சிலர்களில்  தி.மு.க கவுன்சிலர் 9 பேர்களும், ஒரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர், ஒரு மார்க்சிஸ்ட்  கவுன்சிலர், அ.தி.முக கவுன்சிலர் 5 பேர்களும்  சுயேட்சை 2 பேர்களும் என 17 கவுன்சிலர்கள்  கலந்துகொண்டனர்.

கூட்டம் திமுக பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமையில்  நிர்வாகஅலுவலர் சின்னசாமிபாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்த சொத்துவரி, தொழில்வரி சம்மந்தமாக உரிய ரசீது கூட்டத்தில் காண்பிக்கப்பட்டதா? அதன் விளக்கம் கொடுங்கள் என தி.மு.க 14வது வார்டு கவுன்சிலர் சரவணன் மற்றும். 16 வது வார்டு மார்க்சிஸ்ட்  கட்சி கவுன்சிலர்  சின்னன் கேட்டதற்கு உங்களிடம் பதில் சொல்லமுடியாது என பதில் கூறப்பட்டதை கண்டித்து தி.மு.க கட்சி கவுன்சிலர்கள்  14 வது வார்டு சரவணன், 2வது வார்டு பாலசுப்பிரமணி 18 வது வார்டு மஞ்சு 9வது வார்டு கஸ்தூரி 6வது வார்டு பாராசக்தி,  மற்றும் 16 வது வார்டு மார்க்சிஸ்ட் கவுன்சிலர் சின்னன், 10 வது வார்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் மீனாட்சி ஆகிய  7 கவுன்சிலர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

 

அதை தொடர்ந்து 10வது வார்டு கவுன்சிலர் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி மீனாட்சியுடன்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட செயலாளர் பெருமாள் உள்ளிட்ட  50க்கும்  மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்  ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி தலைவர் சந்திரகலாவையும், செயல் அலுவலரையும்  கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment

Post Top Ad