தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, ஜக்கம்பட்டி அருகில் உள்ள முத்து மாரியம்மன்நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களை கழிவறைகளை சுத்தம் செய்ய செய்வது குப்பைகளை அள்ள வைப்பது, சாக்கடைகளை தூர்வார வைப்பது என பள்ளி நிர்வாகம் ஈடுபடுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து மாணவ மாணவியருக்கு இதுபோன்று பணிகளை செய்ய சொல்லும் ஆசிரிய, ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் பள்ளி மாணவர்களை துப்புரவு பணிகளில் ஈடுபடுத்துவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளிகளில் மாணவ மாணவியர்களை தூய்மை பணி மற்றும் பிற பணிகளை செய்ய அறிவுறுத்தி வரும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர். தீண்டாமை ஒரு பாவ செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்ற வாசகங்கள் பள்ளி புத்தகங்களில் இருந்தும், இது போன்ற குறிப்பிட்ட சமுதாய மாணவ மாணவியர்களை மட்டும் தூய்மை பணிக்காக பணித்திருப்பது மிகவும் வெட்கக்கேடானது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
No comments:
Post a Comment