தேனி மாவட்டம் E. புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட E. புதுக்கோட்டை பொதுமக்கள் கழிப்பிடம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ₹ 10,00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிலையில் தற்போது உள்ள ஊராட்சி மன்ற தலைவர் அன்னபிரகாசம் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பின்பும் இன்று வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்களும் இளைஞர்களும் வெளி உபாதை சொல்வதற்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் இந்த கழிப்பிடம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருக்கும் பொழுது கட்டப்பட்டது தற்சமயம் இத்தனை ஆண்டுகள் ஆகியும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின்பும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் மக்களுடைய வரிப்பணத்தில் கட்டிய பணம் மொத்தமும் வீணாகி போவதாக அப்பகுதியில் வாழும் வாலிபர்களும் இளைஞர்களும் இதற்கு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment