நெடுஞ்சாலைத்துறை அதிகாரியின் மீது நடவடிக்கை கோரி விசிக போராட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 28 November 2022

நெடுஞ்சாலைத்துறை அதிகாரியின் மீது நடவடிக்கை கோரி விசிக போராட்டம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேதென்கரை பேரூராட்சி தண்ணீர் துறை தெருவில் இளையராஜா என்பவர் வசித்து வந்த வீட்டை  நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் - இடித்ததை கண்டித்து நீதி கேட்டு தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்திடம் நீதி கேட்டு வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள் மீது வண்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இளையராஜா குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க கோரியும் இடித்த வீட்டை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது இதே கோரிக்கையை வலியுறுத்தி கள்ளிப்பட்டி ஆதிதிராவிடர் உறவின்முறை கிராம பொறுப்பாளர்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது. 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த மாவட்டச் செயலாளர் நாகரத்தினம், இளமதி, ஜோதி முருகன், சேகுவேரா,  தொல்தளபதி இனியன், வெற்றிவேல், மதன், தமிழ்ச்செல்வன், ஞானசேகர், ராஜாங்கம் மற்றும் ஊர் கிராம நிர்வாகிகள் செயலாளர் காளியப்பன், குருநாதன் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டு வீடு இடிக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.


தேனிமாவட்டசெய்தியாளர் எம்.சேதுராமன் 

No comments:

Post a Comment

Post Top Ad