தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முழக்கம் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை இந்தியா விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் சுகாதாரத்தை வலியுறுத்தி உறுதிமொழி மேற்கொண்டனர்.
நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல், ஊராட்சி மன்ற தலைவர் பிரபா மருதுபாண்டி,ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, சரவணன், ஈஸ்வரன், பாக்கியம் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயமாலா, மற்றும் அரசு பள்ளி. ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment