பௌர்ணமியை முன்னிட்டு கைலாசநாதருக்கு அன்னாபிஷேகம் அலங்கரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.ப.ஜெயப்பிரதீப் அவர்கள் பௌர்ணமியையொட்டி கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பௌர்ணமி திருநாளை ஒட்டி மலைக்கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு ரேணுகா வித்யாலயா பள்ளி பொறுப்பாளர் விஜயராணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப், செயலாளர் க.சிவக்குமார் பொருளாளர் விஜயராணி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment