இதனை அடுத்து, தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவர் நேரில் சந்தித்து அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். செய்தியாளர்களை அவர் சந்தித்த பொழுது : கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்து, வீட்டு வரி சொத்து வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தி வந்த நிலையில், அந்த வீட்டிற்கு உரிமையாளர்களை ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி வீடு இடிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினரின் இந்த செயல் கண்டனத்திற்குரியது. வீட்டினை இடித்து தள்ளிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வீட்டினை இழந்த குடும்பத்திற்கு இழப்பீடாக 50 லட்சம் வழங்க வேண்டும் அல்லது இடிக்கப்பட்ட இடத்திலேயே வீடு கட்டி தர வேண்டும் என்றார். உடன், தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் தலித் ராயன், பாலா என்கிற தமிழரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.
No comments:
Post a Comment