தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் மலைக்கோயிலில் மகா சனி பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதருக்கும் ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்றது. முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கைலாசநாதர் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டன.தேனி மாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர் வருகை தந்தபக்தர்களுக்கு ஓ.ராஜா தேனி மாவட்ட ஆவின் மண்டல தலைவர் பிரசாதம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் விப.ஜெயபிரதீப் செயலாளர் சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
வருகின்ற 7.11.2022 (திங்கள்கிழமை) கைலாசநாதர் மலைக்கோயிலில் 'கைலாசநாதருக்கு அன்னாபிஷேகமும் பெளர்ணமி கிரிவலமும் சிறப்பு அன்னதானமும் நடைபெறும்என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment