தனியார் பார் மற்றும் மனமகிழ் மன்றம் பெரியகுளம் நகர் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 17 November 2022

தனியார் பார் மற்றும் மனமகிழ் மன்றம் பெரியகுளம் நகர் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்.

பெரியகுளம் பொதுமக்கள் போக்குவரத்திற்கும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லுகின்ற மாணவர்களுக்கு இடையூறாக இருந்து வரும் தனியார் பார் மற்றும் மனமகிழ் மன்றம் போன்றவற்றை பெரியகுளம் நகர் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில்  ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம்  தென்கரை காந்தி  அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகர் பகுதியில் இயக்கி வரும்  பொதுமக்கள் போக்குவரத்திற்கும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லுகின்ற மாணவர்களுக்கு இடையூறாக இருந்து பெரியகுளம் மூன்றாம்  கிளாமர் ரேக்ரியேசன் கிளப் (RR பார்) வைகை அணை சாலையில் செயல் பட்டு வரும்  மீனாட்சி பார் மற்றும் தேனி சாலையில் செயல்பட்டு வரும்  நண்பர்கள் மனமகிழ் மன்றம் ஆகிய தனியார் பார் மற்றும் மனமகிழ் மன்றம் போன்றவற்றை பெரியகுளம் நகர் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோரி  ஆர்பாட்பம் நடைபெற்றது.


அப்போது நகராட்சி நிர்வாகத்தையும் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும்  மனமகிழ் மன்றம் மற்றும்  தனியார் பார்  ஆகியவற்றை அகற்ற கோரி கோரிக்கை  வைத்து அதனை தொடர்ந்து  இதுவரை பல போராட்டம் நடத்தபட்டும் செவி சாய் காத அரசை கண்டித்தும்  பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.


இந்த ஆர்பாடத்திற்கு தாலுகா செயலாளர் எம். வி முருகன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். ராமச்சந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பின்கள்  வெண்மணி இளங்கோவன் ராமச்சந்திரன் பிரேம்குமார் மற்றும் ராமர், மன்னர் மன்னன், மதன் குமார், உள்ளிட்ட பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


மேலும் பெரியகுளம் பகுதியை இயக்கி வரும் தனியார் பார்கள் மற்றும் மணமகள் மண்றத்தை அகற்றக்கோரி பல்வேறு கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதுவரையிலும் அரசு அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அரசு நடவடிக்கை எடுக்கும் தவறும் பட்சத்தில் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad