கைலாசபட்டி அருகே தனியார் கல்லூரியில் செவிலியர் முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 24 November 2022

கைலாசபட்டி அருகே தனியார் கல்லூரியில் செவிலியர் முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி.


பெரியகுளம் கைலாசபட்டி அருகே தனியார் கல்லூரியில் செவிலியர் முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி கால் ஒடிந்து பலத்த காயமடைந்த நிலையில் தேனி அரசு  மருத்துவமனையில் அனுமதி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி செயல்பட்டு வருகிறது இங்கு பட்டப்படிப்பு மற்றும் செவிலியர் படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட பாடப்பிரிவில் கல்லூரி இயங்கி வருகிறது


 இந்நிலையில்  கல்லூரியில் முதலாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வரும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கோம்பை பண்ணைபுரத்தைச் சார்ந்த பாண்டியன் என்பவரின் மகள் கல்லூரி மாணவி லக்க்ஷிதா 19 வயது என்பவர் தற்கொலை செய்யும் நோக்கில் கல்லூரி மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயம் ஏற்படவே சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு சம்பவம் குறித்து தெரிவித்ததில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்லூரி நிர்வாகத்தினர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பெரியகுளம் வட்டாட்சியர் சம்பவ இடத்தில் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.


மேலும் காயமடைந்த மாணவியை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாணவி தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பெரியகுளம் சகமானவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் தென்கரை காவல்துறையினர் விசாரணை. கல்லூரி மாணவி கல்லூரி கட்டிட மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய என்ன காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது மேலும் பெரியகுளம் பகுதியில் கல்லூரி மாணவியின் இந்த செயல் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இதனால் கல்லூரிக்கு குழந்தைகளை அனுப்பி உள்ள பெற்றோர் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad