தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற உடனுறைகைலாச நாதர்மலைக்கோயிலில் கார்த்திகை மாதம் சோமவார பிரதோஷ வழிபாடு நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதருக்கும் 9 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உலக ஒற்றுமைக்காக கூட்டு வழிபாடு நடைபெற்றது.

பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வருகை தந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப், செயலாளர் க.சிவகுமார், பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள், கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
மேலும் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி கோவிலில் பல்வேறு வகையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment