தேனி அருகே வரட்டாறு பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுபான கூடத்தால் உயிர் பலி ஏற்படும் அபாயம் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை !! - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 November 2022

தேனி அருகே வரட்டாறு பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுபான கூடத்தால் உயிர் பலி ஏற்படும் அபாயம் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சில மீட்டர் தூரத்தில்,  தேனி திண்டுக்கல் (NH45)தேசிய நெடுஞ்சாலையோரம் தனியார் மதுபான கூடம் மனமகிழ் மன்றம் இயங்கிவருகின்றது. இந்நிலையில், தேனியில் இருந்து வடுகபட்டி செல்லும் கணவன் மனைவி அவர்களது இருசக்கர வாகனத்தில்  சென்று கொண்டிருந்த போது இவர்களுக்கு முன்னால் காரில் சென்ற மது பிரியர்கள் திடீரென வாகனத்தை சாலை விதிகளை மதிக்கமால் மது அருந்தும் ஆவலில் தனியார்  மதுபான கூடத்திற்குள் திருப்பியதால் காரின் பின்னால் சென்ற கணவன் மனைவி நிலை தடுமாறி, தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்துள்ளனர்.  

சாலையில் இருவர் கீழே விழுந்து கிடந்ததை அறிந்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து வாகனங்களை நிறுத்தியதால் பெரும் விபத்து மற்றும் உயிர் பலி தவிர்க்கப்பட்டது. அருகில், இருந்தவர்கள் கீழே விழுந்த கணவன், மனைவியை மீட்டு அவர்களை ஆறுதல்படுத்தினர். மேலும், கீழே விழுந்தவர் காரில் சென்றவரிடம் கேள்வி எழுப்பியதற்கு காரில் இருந்து இறங்கி வந்தவர்கள் மிரட்டும்  வகையில்    பேசி உள்ளனர். இத்தகைய செயல் அவ்வழியே சென்ற பொதுமக்கள் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 


தனியார் மதுபான கூடம் அருகில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு மேல்நிலைப் பள்ளி, பெட்ரோல் பங்க், துணை மின் நிலையம், மின்வாரிய அலுவலகம், தனியார் வர்த்த நிறுவனங்கள் என  தினந்தோறும் ஏராளமானோர் சென்று வர கூடிய பகுதியில் தனியார் மதுபான கூடம் செயல்பட்டு வருவதால் இனி வரும் காலங்களில் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூடத்தை அகற்றிட வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தேனி மாவட்ட  நிர்வாகத்திற்கும், மாவட்ட கலால் துறை உயர் அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும்  கோரிக்கை வைக்கின்றனர் .


- தேனி செய்தியாளர் எம்.சேதுராமன் 

No comments:

Post a Comment

Post Top Ad