தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய ஒக்கலிக்கர் காப்பு மகாஜன சங்க உறவின்முறை சார்பில் கல்வி தந்தை ஆறுமுகசாமியின் 81வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு இரத்ததான முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது .
முகாமினை மருத்துவர் வாசகர் துவக்கி வைத்தார். சங்க ஒன்றியத்தினுடைய தலைவர் சாமியப்பன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி சங்க கொடியை ஏற்றி வைத்தார். நிர்வாகிகள் சிவக்குமார், சரவணன், வீரபாண்டியன், கார்த்திக், ராமமூர்த்தி, உட்பட பலர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இப்பகுதியில் முதல்முறையாக ஒக்காலிகர் காப்பு சங்க சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்று ஏராளமானோர் ரத்த தானம் செய்துள்ளனர்.

இந்த ரத்ததானம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் மருத்துவமனை மருத்துவர்கள் தலைமையில் பெற்றுக் கொள்ளப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. முகாமில் ஏராளமானவர்கள் ரத்ததானம் வழங்கினார்கள். வரும் காலங்களில் இன்னும் கூடுதலாக இரத்த தானம் வழங்க விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment