பெரியகுளம் அருகே நெடுஞ்சாலைத் துறையினரால் இடிக்கப்பட்டு வீடுன்றி வாழ்ந்து வரும் இளையராஜா குடும்பத்தினருக்கு மாங்கனி நகர் அரிமா சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 25 November 2022

பெரியகுளம் அருகே நெடுஞ்சாலைத் துறையினரால் இடிக்கப்பட்டு வீடுன்றி வாழ்ந்து வரும் இளையராஜா குடும்பத்தினருக்கு மாங்கனி நகர் அரிமா சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட தண்ணீர் துறை  பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வாழ்ந்து வந்தவர் முத்து மகன் இளையராஜா இவர் வீடு கட்டி வாழ்ந்து வந்த இடம் பெரியகுளம் நெடுஞ்சாலைத் துறைக்கு  சொந்தமான இடம் என்று கூறி கடந்த 22 ஆம் தேதி பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா தலைமையிலான போலீசார் பெரியகுளம் வட்டாட்சியர் காதர் ஷெரிப், பெரியகுளம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரின் சுல்தானா உதவி பொறியாளர் அனுசுயா தென்கரை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள்  என அனைவரின்  முன்னிலையில்  இளையராஜா அவரது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த வீட்டினை ஜேசிபி மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.

இதனால் வாழ்வாதாரம் இழந்து வீடுன்றி நெடுஞ்சாலைத் துறையினரால் இடிக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே  தங்கி வரும் இளையராஜா குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் நடவடிக்கை எடுக்ககோரி  பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்புகள் இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி பாதிக்கப்பட்ட இளையராஜா குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.  


இந்நிலையில் இன்று பெரியகுளம் மாங்கனி நகர் அரிமா சங்க தலைவர் ராமநாதன் தலைமையில், செயலாளர் ரமணி குமார், பொருளாளர் நித்தியானந்தம், நிர்வாகிகள் முத்து இருளப்பன், ஜெகன், பாண்டியன், பக்ரி முகமது, செல்வகுமார் ஆகியோர் இளையராஜா குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் காய்கறிகள் அரிசி, வேட்டி, சேலை இளையராஜாவின் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் போன்றவற்றை வழங்கினார்கள்.


மேலும் பெரியகுளம் மாங்கனி நகர் அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் இளையராஜா குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு அளிக்க உள்ளதாக  தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இளையராஜாவின் குடும்பம் வீடுன்றி சாலையின் ஓரம் சமைத்து வாழ்ந்து வருவது அப்பகுதி  பொதுமக்களிடையே மனவேதனையை உள்ளாக்குகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad