தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியம், நரியூத்து ஊராட்சிக்கு உட்பட்ட நரியூத்து கிராமத்தில் மத்திய நிதி குழு மானியத்திலிருந்து ஒருவருடத்திற்கு முன் தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு மையம் ரூபாய் 9.88 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு சில மாதங்களே இயங்கிய இந்த குடிநீர் சுத்திகரிப்பு மையம் தற்போது ஓரு வருடமாக இயங்காமல் பழுதான நிலையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஒரு சில மாதங்களே நல்ல நீர் குடித்த இவ்வூர் பொதுமக்கள் பொழுதான குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பொழுது நீக்கி மீண்டும் செயல்பாட்டிற்கு வர வேண்டும் என ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த குடிநீர் சுத்திகரிப்பு மையத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தேனி செய்தியாளர் எம்.சேதுராமன்
No comments:
Post a Comment