தேனி மாவட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தமபாளையம் தாலுகா காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கமுத்து மகன் பிரித்விராஜ் 42 வயது அவரது மனைவி ஹெரினா வளர்மதி 38 வயது ஆகியோருக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை இருந்து வந்த நிலையில் இருவரும் குடும்பத்தாரார் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஹெலினா வளர்மதியின் சித்தி மகன் லாரன்ஸ் என்பவர் தான் இவர்கள் பிரிவிற்கு காரணம் எனக்கூறி பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்ததில் லாரன்ஸ் உயிரிழந்தார் இதனால் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தேனீ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று இறுதி விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி பிரித்விராஜ்க்கு ஒரு ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் அபராத தொகை கட்ட தவறினால் மூன்று மாதம் மெய்க்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி சஞ்சய் பாவா தீர்ப்பு வழங்கினார்
No comments:
Post a Comment