தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள 24 கிராம உதவியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நேற்று நடந்தது. இதற்காக தேனி தாலுகாவில் கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரியிலும், பெரியகுளம் தாலுகாவில் பெரியகுளம் விநி அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி தாலுகாவில் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வுக்காக மாவட்ட அளவில் 3, 720 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தேனி தாலுகாவில் விண்ணப்பித்த 670 பேரில் 477 பேர் தேர்வு எழுதினர் 193 பேர் தேர்வு எழுதவில்லை பெரியகுளம் தாலுகாவில் 494 பேரில் 364 பேர் தேர்வு எழுதினர் 13 பேர் தேர்வு எழுதவில்லை ஆண்டிபட்டி தாலுகாவில் 891 பேரில் 685 பேர் தேர்வு எழுதினார் 206 பேர் தேர்வு எழுதவில்லை உத்தமபாளையம் தாலுகாவில் 981 பேரில் 728பேர் தேர்வு எழுதினர் 253 பேர் தேர்வு எழுதவில்லை போடி தாலுகாவில் 684 பேரில் 484 பேர் தேர்வு எழுதினர் 200 பேர் தேர்வு எழுதவில்லை மாவட்ட அளவில் விண்ணப்பித்த 3720 பேரில் 2738 பேர் தேர்வு எழுதிய நிலையில் 982 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சன்ட் ஆகினர்.
- தேனி செய்தியாளர் எம்.சேதுராமன்
No comments:
Post a Comment