தேனி மாவட்டம் பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் அமைந்துள்ள அதிமுக தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவிந்தர்நாத் அலுவலகம் முன்பு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு வைக்கப்பட்ட படத்திற்கு அதிமுக முன்னாள் முதல்வரும்.கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பெரியகுளம் நகரச் செயலாளர் அப்துல் சமது தலைமையில் ,அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ. சண்முகசுந்தரம் முன்னிலையில் நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட பிரதிநிதி அன்பு, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகானந்தம், முன்னாள் நகர பொருளாளர் ரங்கராஜ், முன்னாள் அரசு தரப்பு வழக்கறிஞர் வெள்ளைச்சாமி, முத்துக்குமார், முத்துப்பாண்டி, கதிரேசன், நந்தகுமார், ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ரங்கராஜ், நகர இலக்கிய அணி செயலாளர் சலீம், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் பன்னீர்செல்வம், ராஜாங்கம் என 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
- தேனி செய்தியாளர் எம்.சேதுராமன்
No comments:
Post a Comment