இந்துஅறநிலையத்துறை சார்பில் தேனி மாவட்டம், பெரியகுளம், அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் முன்னிலையில் இரண்டு திருமண இணைகளுக்கு திருமணம் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன்-மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருமணத்தின் இரண்டு ஜோடிகளுக்கும் திருமண சீர்வரிசை பொருட்களை இந்து அறநிலையத்துறையின் சார்பில் கோவில் செயல் அலுவலர் ராமதிலகம் அவர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் P.T.செல்லப்பாண்டியன். பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார். நகரச் செயலாளர் முகமது இல்யாஸ் - நகர அவைத்தலைவர் வெங்கடாசலம் நகர துணைச்செயலாளர் எம்.சேதுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
- தேனி செய்தியாளர் எம்.சேதுராமன்.
No comments:
Post a Comment