பெரியகுளம் அரண்மனை தெரு பகுதியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு இபிஎஸ் ஆதரவாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அரண்மனை தெரு பகுதியில் இன்று மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ .ஜெயலலிதா அவர்களின் 6 ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு வைக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி .கே பழனிச்சாமி ஆதரவாளர் பெரியகுளம் நகர பொறுப்பாளர் பழனியப்பன் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியவீரன் முன்னிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் .இதில் எடப்பாடி .கே .பழனிச்சாமி ஆதரவாளர்கள் வெங்கடேஷ், நாகராஜ், பாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், வரதராஜன், நாகேந்திரன், கார்த்திக், ஜெயக்குமார், பவுன்ராஜ், ஜெயவீரன் என ஏராளமான கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment