கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்த 8 ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கினார் ஓ. பன்னீர்செல்வம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 December 2022

கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்த 8 ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கினார் ஓ. பன்னீர்செல்வம்.


தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் கடந்த இருபத்தி மூன்றாம் தேதி இரவு கார்கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்த 8 ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தினரையும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணதொகையை வழங்கினார்.

முன்னதாக  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்து  சிகிச்சை பெற்று வரும் ராஜா மற்றும் அவரது மகன் ஹரிஹரன் ஆகிய இரண்டு பேர்களையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று  அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினரை நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.


மேலும் உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாயை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கினார். காயம் அடைந்த தந்தை மகன் ஆகிய இருவருக்கு மொத்தம் 35 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை வழங்கினார். நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஓபிஎஸ் அணி அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad