பெரியகுளம் அருகே கைலாசபட்டி பண்ணை வீட்டில் ஓபிஎஸ் அணி சிவகங்கை ,தூத்துக்குடி மாவட்ட அதிமுக புதிய நிர்வாகிகள் ஒபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 December 2022

பெரியகுளம் அருகே கைலாசபட்டி பண்ணை வீட்டில் ஓபிஎஸ் அணி சிவகங்கை ,தூத்துக்குடி மாவட்ட அதிமுக புதிய நிர்வாகிகள் ஒபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டி யில் உள்ள அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஒபிஎஸ் அவர்களால்  புதிதாக நியமிக்கபட்ட சிவகங்கை  மாவட்ட புதிய  நிர்வாகிகள்  ஓபிஎஸ் அவரது பண்ணை வீட்டில்  நேரில் சந்தித்து பூக்கொத்து , சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் அசோகன், அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர், இதேபோல் தூத்துக்குடி மாவட்ட செயலாளார் வினோபாஜி, இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனி என்ற ராஜகோபால், அம்மா பேரவை செயலாளர் கணேஷ் பாண்டியன், மாவட்ட இணை செயலாளர் ஜெயசீலன், மாவட்டத் துணைச் செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் விளாத்திகுளம் சுந்தரவேல், கந்தவேல், கோவில்பட்டி வருமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கயத்தாறு மேற்கு சுந்தர்ராஜ், கயத்தாறு மத்தியம் கண்ணையன் கயத்தாறு கிழக்கு காளிபாண்டி, கோவில்பட்டி மேற்கு மகேஷ் குமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை கிழக்கு ஒன்றிய செயலாளர் சோலையப்பன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், விளாத்திகுளம் நகர செயலாளர் சண்முகவேல் கழுகுமலை நகர செயலாளர் முத்தையா, கயத்தாறு நகர செயலாளர் பரசுராமன், மருது, எட்டயபுரம் முத்து முருகன் உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன்  இருந்தனர்.


மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி செயலாளர் பழனி என்பவர் ஆள் உயர மாலை அணிவித்து 7கிலோ எடையுள்ள சுமார் 6.5அடி உயரமுடைய வெண்கல வேல் வழங்கினார். மேலும் வெற்றி வேல்! வீர வேல் என்ற கோசம் எழுப்பினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad