தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி பகுதியில் உள்ள வனத்துறை குடியிருப்பு வளாகத்தில் இன்று வனத்துறை அலுவலர்களுக்கான வனத் தீ தடுப்பு , வன உயிரினங்களை காப்பது, தீ வருமுன் காப்பது குறிப்பு பயிற்சி முகாம் மாவட்ட வன அலுவலர் திலீப் தலைமையில் நடைபெற்றது. தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் அ.டேவிட்ராஜா முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில், முன்னாள் வனச்சரக அலுவலர் இன்பசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வன பகுதியில் ஏற்படும் தீயினை எவ்வாறு அணைப்பது, தீ ஏற்படாமல் இருக்க முன்னெரிக்கை நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
இதில், கொடைக்கானல் வன உயிரின சரணாலயம் கோட்டத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் வனசரக அலுவலர் சிவகுமார், பெரும்பள்ளம் வனசரக அலுவலர் குமேரசன், பேரிச்சம் வனசரக அலுவலர் சுரேஷ்குமார், பழனி வனசரக அலுவலர் பழனி குமார், மன்னவனூர் வனசரக அலுவலர் ஞான சேகரன் மற்றும் வனவர் ராமசாமி, விவேகானந்தன், பூவேந்தன் உள்ளிட்டோர் மற்றும் வனகாப்பாளர், வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், சூழல் சுற்றுலா காவலர்கள் என ஏராளமான வனத்துறையினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் வனத்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு உள்ள வனத்துறை கட்டிடம் ,வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு பராமரித்து வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் பராமரிப்பு பணிகள் குறித்தும் ,பொதுமக்கள் அமர்ந்து கண்டு ரசிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட மூங்கில் குடில், கும்பக்கரை அருவி பகுதிக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வரும் இடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் குறித்தும் மாவட்ட வன அலுவலர் திலீப் கேட்டறிந்தார் .
No comments:
Post a Comment