தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையத்தின் அருகில் டீக்கடையில் டீ குடிப்பதற்காக பெரியகுளம் அழகர்சாமி புரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமாரி என்றவர் வந்துள்ளார். அந்த பகுதியில் குடிபோதையில் ரகளை ஈடுபட்ட வடகரை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அக்கீம் என்பவர் திடீரென கையில் வைத்திருந்த ஆயுதத்தை கொண்டு முத்துக்குமாரை திடீர் என தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் காயம் பட்டு ரத்தம் கொட்டியது இந்த தாக்குதலில் நிலை குலைந்த முத்துக்குமரைஅருகில் இருந்தவர்கள் 108 வாகனத்திற்கு தகவல் சொல்லி பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் இச்சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த பெரியகுளம் காவல்துறையினர் போரை ஆசாமியை மிகவும் பக்குவமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
டீ குடிக்க வந்த நபரை அடித்து மண்டையை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதை போல பெரியகுளம் பகுதியில் கஞ்சா மது போன்ற போதை பழக்கங்களால் இது போன்ற தீய சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அச்சத்துடன் தெரிவிக்கின்றார்கள்.

No comments:
Post a Comment