இந்த நிகழ்ச்சிக்கு ஜோ.மனோஜ்குமார் தலைமை தாங்கினார், கோம்பை பேரூர் செயலாளர் முல்லைமாரிமுத்து, ஒன்றிய செயலாளர் செல்வம், ஒன்றிய பொருளாளர் சங்கரமூர்த்தி, ஒன்றிய து.செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.ரெங்கநாதன் பேரூர் பொருளாளர், கோம்பை வெ.கனியமுதன் மாநில துணைப் பொதுச் செயலாளர், இரா.தமிழ்வாணன் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர், சோ.சு.சுருளி மாவட்டச் செயலாளர்(மே), பெர்க்மான்ஸ் மாவட்ட பொருளாளர், ஆரோக்கியசாமி மாவட்ட துணைச் செயலாளர், முல்லைபாரதி மாவட்ட செய்தி தொடர்பாளர், முருகேசன் கம்பம் சட்டமன்ற தொகுதி செயலாளர், உதயக்குமார் கம்பம் சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர், லட்சுமணன் போடி சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர், ஆகியோர் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றினர். நிகழ்வில் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியம் கோம்பை பேரூராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் 60 மணி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோம்பை பேரூராட்சி கிராமச்சாவடியில் நடைபெற்றது.
No comments:
Post a Comment