தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி மலைமேல் கைலாசநாதர் திருக்கோவில் இந்தாண்டு முதல் இந்து அறநிலையதுறை கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அனைத்து நல்காரியங்களும் அறநிலையதுறை மூலமாக செய்யப்பட வேண்டும் - ஆனால் கடந்த ஆண்டுகளில் அதிமுக ஆட்சிகாலத்தில் ஒ.பன்னீர்செல்வம் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் கோவிலைச் சுற்றி உள்ள நிலங்கள் பினாமி பெயரில் உள்ளதாகவும் அதனைப் பாதுகாக்கவே அன்பர் பணிக்குழு என்று ஆரம்பித்து அதிமுகவினர் அதிகளவில் உள்ள உறுப்பினர்கள் மூலமாக அரசுக்கு எதிராக திட்டமிட்டு வதந்திகளை பரப்பி மக்களையும் - பக்தர்களையும் திசைதிருப்பும் செயல்களை செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் சில விரும்பத்தகாத சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணையில் இருக்கும் போது - அரசின் சட்ட திட்டங்களை மதிக்காமல் அன்பர் பணிக்குழுஎன்ற போர்வையில் மீண்டும் அறநிலையதுறையை மதிக்காமல் பிரதோச வழிபாடு என்ற போர்வையில் அதிமுகவினர் ஒன்றுகூடி திட்டமிட்டுவழிபாடு நடத்தி இருப்பு அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது என பக்தர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது நடந்த அராஜக போட்டு ஆட்சிமாற்றத்துக்கு பின்பும் நடப்பது அதிர்ச்சி அளிப்பதாக சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர், கைலாசநாதர் கோவில் மர்மங்கள் முழுவதுமான விசாரணையின் போது தான் தெரியும்.
- தேனி மாவட்ட செய்தியாளர் எம்.சேதுராமன்.

No comments:
Post a Comment