தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக ஒன்றிய செயலாளர்கள் லோகிராசன் மற்றும் வரதராஜன் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றிய மற்றும் நகரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment