பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் உள்ளது கும்பக்கரை அருவி. இந்த அறிவுக்கு, தேனி மாவட்டம் மற்றும் அருகில் உள்ள திண்டுக்கல் மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிட்டு குடும்பத்துடன்கண்டு களித்து வந்தனர்.
கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் முருக பக்தர்கள் வருகை புரிந்து புனித நீராடி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஆகவே அருவிகளில் குளிக்கவும் பார்வையிடவோ சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ஆகவே தண்ணீர் வரத்து சீரான பின்பு பொதுமக்கள் பார்வைக்காக கும்பக்கரை அருவி திறக்கப்படும் என தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment