இந்நிலையில் இரண்டாவது மகனான மருதுபாண்டி திருப்பூரில் வேலை பார்த்து வந்தவர். தற்போது தனது தாய் தந்தையுடன் வசித்து வந்த நிலையில மது, கஞ்சா, போதை மாத்திரிரைக்கு அடிமையாக இருந்த மருதுபாண்டி இன்று காலை அவரது தாய் ஜோதி லட்சுமியிடம் கஞ்சா வாங்குவதற்காக 50 ரூ பணம் கேட்டதாக கூறப்படுகிறது அப்போது ஏற்கனவே தனது மகன் பல்வேறு போதைக்கு அடிமையாகி இருப்பதை அறிந்த தாய் பணம் தர மறுத்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து தாய் ஜோதி லட்சுமியிடம் தகராறில ஈடுபட்ட மருதுபாண்டி பணம் தர மறுத்த தாயின் மீது உள்ள ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து தனது தாயின் பின் தலையில் பலமாக தாக்கியதில் மயக்கமடைந்த தாய் ஜோதிலட்சுமி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ஜோதிலட்சுமி தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார் இச்சம்பவம் குறித்த காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்திருந்த ஜோதிலட்சுமியை சம்பவ இடத்திலிருந்து மீட்டுஆம்புலன்ஸ் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜோதிலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் மீனாட்சி தப்பி ஓடிய மருது பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் மஞ்சளாறு அணை பகுதியில் மது கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்டவைகளை பெரும்பாலன இளைஞர்கள் அருந்துவதாகவும் இதனால்தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் மஞ்சளார் அணைப்பகுதியில்மது கஞ்சா போதை மாத்திரை விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்திட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெரியோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மது போதைக்கு அடிமையாகி பெற்ற தாயை கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment