இந்த மருத்துவ முகாம் பெரியகுளம் மாங்கனி நகர் அரிமா சங்கத் தலைவர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது . முகாமினை தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் ,பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர். இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள், முதியவர்கள் கலந்துகொண்டு தாங்கள் உடம்பில் உள்ள பிரஷர், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொழுப்பு, நரம்பு, இதய நோய், முடக்குவாதம் போன்ற பல்வேறு விதமான நோய்களுக்கான பரிசோதனை செய்து கொண்டனர்.
மேலும் குறைபாடு உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள். இந்த முகாமில் தென்கரை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் தேவராஜ், செந்தில்குமார், பெரியகுளம் மாங்கனி நகர் அரிமா சங்க செயலாளர் ரமணி குமார், வட்டார தலைவர் அய்யப்பன், ஒருங்கிணைப்பாளர் முத்து இருளப்பன், உறுப்பினர்கள் செல்வகுமார், ராஜ்குமார் மற்றும் சாந்தி மருத்துவமனை மருத்துவர்கள் எம்.நிர்மல் குமார், இளவரச பாண்டியன், செவிலியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக முகாமிற்கு வருகை தந்த நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், அரிமா சங்க நிர்வாகிகளுக்கு சாந்தி மருத்துவமனை மருத்துவர் எம். நிர்மல் குமார் அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- தேனி மாவட்ட செய்தியாளர் சேதுராமன்.
No comments:
Post a Comment