இறப்பு நிகழ்விற்கு பயன்படுத்த தண்ணீர் தொட்டி அமைத்து தர கோரிக்கை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 December 2022

இறப்பு நிகழ்விற்கு பயன்படுத்த தண்ணீர் தொட்டி அமைத்து தர கோரிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் நகராட்சி ஆணையாளர் புனிதன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-16 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் கிஷோர் பானுநூர்முகமது. 14,15 ,16 , 17 ஆகிய வார்டு பொதுமக்கள்தங்கள் பகுதிகளில் இறப்பு ஏதும் நடந்து விட்டால் நீர் மாலை என்னும் சடங்கிற்காக வராக நதிஆற்றுக்கு சென்று நீர் மாலை எடுத்து வந்தனர்.ஆனால் தற்பொழுது வராகணியில் சாக்கடை கலந்து செல்வதால் அதனை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது ஆகவே நகராட்சி நிர்வாகம் சுதந்திர வீதி அரச மரம் அருகில் தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும் எனவும், காமாட்சியம்மன் கோவில் தெருவில் பாதாள சாக்கடை பைப்புகளில் அடைப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது.


ஆகவே பழைய பைப்லைன்களை அகற்றிவிட்டு புதிய பைப்புகள் அமைத்து தர வேண்டும் எனவும்,நடப்பாண்டி சொத்து வரி குடிநீர் வரி பாதாளசாக்கடை வரிகளை மார்ச் மாதம் வரை கட்டுவதற்கு அவகாசம் இருந்தும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் கட்டவில்லை என்றால் குடிநீர் இணைப்பு பாதால சாக்கடை இனிப்புகளை துண்டிப்போம் என்று மக்களை மிரட்டி வரிவசூலிப்பவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.


ஆகவே நகராட்சி நிர்வாகம் இத்தகைய போக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.அனைத்து தரப்பு மக்களுக்கான கோரிக்கைகளை தொடர்ந்து பேசி வரும் 16 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கிஷோர் பானு அவர்களுக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad