தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகைஅணையில் முதல் வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டது. 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டியதையடுத்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது . கடந்த சில நாட்களாக வைகை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது 66 அடியாக உயர்ந்ததையடுத்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
68.5 அடியாக உயர்ந்தவுடன் இரண்டாம் வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியாக உயர்ந்தவுடன் மூன்றாம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். 71 அடி உயர்ந்தவுடன் அணை திறக்கப்படும். அப்போது அணைக்கு வரும் உபரிநீர் முழுவதுமாக வெளியேற்றப்படும். தற்போது நீர்வரத்து விநாடிக்கு 1947 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் விநாடிக்கு 69 கனஅடியாக உள்ளது. நீர் இருப்பு 4854 மில்லியன் கனஅடியாக உள்ளது.
முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களின் ஆற்றுக்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment