தேனியில் ராஜ வாய்க்கால் தூர்வாரும் பணியைசட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆய்வு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 December 2022

தேனியில் ராஜ வாய்க்கால் தூர்வாரும் பணியைசட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆய்வு.


தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியின் நீர்வரத்துப்பாதையான ராஜவாய்க்காலில்தூர் வாரும் பணியிணை விரைந்து முடிப்பதற்கு நகராட்சி அலுவலர்களுடன் பெரியகுளம்   சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தைதொடர்ந்து ராஜவாய்க்காலின் தூர்வாரும் பணியினை பார்வையிட்டனர். தேனி அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் திருமதி ரேணுபிரியா பாலமுருகன் துணைத் தலைவர் செல்வம், நகராட்சி ஆணையாளர் தேனி நகர் கழக செயலாளர் என்.சி.நாராயண பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அந்த துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மக்களின் தேவையை அறிந்து உடனுக்குடன் மக்கள் பணியை செய்துவரும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் அவர்களை அப்பகுதி மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad