அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் தற்போது புதிதாக ஓ பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட நகரம் ஒன்றிய தேனி மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து பூங்கத்துக்கள் கொடுத்தும் மாலை மற்றும் சால்வை அணிவித்தும் வாழ்த்துகள் பெற்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் முன்னதாக கட்சியில் பணியாற்றியவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு மேலும் மாவட்ட நகர ஒன்றிய பகுதிகளில் தீவிரமாக செயல்படக்கூடிய இளைஞர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் வருகின்ற 21ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளதுஇதற்காக ஓபிஎஸ் அவர்களால் தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட செயலாளர் சையது கான் மாவட்ட அவை தலைவர் போடி பொன்னு பிள்ளை மாவட்ட கழக இணை செயலாளர் முருகேசன் பெரியகுளம் நகர செயலாளர் முகமது சம்மது பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து ஓ பன்னீர்செல்வம் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.
No comments:
Post a Comment