தனியார் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 22 December 2022

தனியார் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகிலும் மூன்றாந்தல் காந்திசிலை, தேனி சாலை, வைகை அணைச்சாலை, உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள தனியார் மதுபான கடைகளை உடனடியாக அகற்ற கோரி டிசம்பர் 24 ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 


அதனைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் பெரியகுளம் ஸ்டேட் பேங்க் திடல், மூன்றாந்தல், பெருமாள் கோவில் வளாகம், வள்ளுவர் சிலை, பழைய பேருந்து நிலையம், அரண்மனை தெரு, உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன.


இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமாத், சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா, இஸ்லாமிய நல கூட்டமைப்பு, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad