கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்த முருகன் 46 மான்கறி வீட்டில் சமைத்து வருவதாக மேகமலை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இந்த தகவலை தொடர்ந்து மேகமலை வனச்சரகர் அஜய், வனவர் ஈஸ்வரன், வனக்காப்பாளர் மணி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று கோம்பைத்தொழு கிராமத்திற்கு விரைந்து சென்று முருகன் அவர்களிடம் விசாரணை செய்து, அவருடைய வீட்டை பரிசோதனை செய்தனர்.

அப்போது 2 கிலோ மான் கறி குக்கரில் வேக வைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் மான்கறி விலைக்கு வாங்கியதாகவும் ஒரு கிலோ கறி ரூபாய் 250 எனவும் முகம் தெரியாத நபரிடம் வாங்கியதாக தெரிவித்தார். இவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மான்கறி எப்படி வந்தது என தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment