பெரிய குளத்தில் தனியார் மதுபான கடைகளை மூடக்கோரி பெருந்திரள்தர்ணா போராட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 December 2022

பெரிய குளத்தில் தனியார் மதுபான கடைகளை மூடக்கோரி பெருந்திரள்தர்ணா போராட்டம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம்,மூன்றாந்தல் காந்தி சிலை, தேனி சாலை, வைகை அணைச்சாலை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கடைகளால்பொதுமக்களும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுவதாகவும் உடனடியாக தமிழக அரசு பெரியகுளம் நகர் பகுதிகளில் உள்ள தனியார் மதுபான கடைகளை அப்புறப்படுத்த கோரி பெருந்திரல் தர்ணா போராட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் கே. பாலபாரதி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், சோசியல் டெமாக்ரட்டி பார்ட்டி ஆப் இந்தியா, இஸ்லாமிய நல கூட்டமைப்பு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் தொண்டர்கள் பெண்கள் பொதுமக்கள் திரளானோர்கலந்து கொண்டு தனியார் மதுபான கடைகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள். பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad