பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஊராட்சி மன்ற தலைவர், செயலர் ஜாதி ரீதியாக பேசுவதாக தமிழ் புலிகள் கட்சியினர் முற்றுகைப் போராட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 December 2022

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஊராட்சி மன்ற தலைவர், செயலர் ஜாதி ரீதியாக பேசுவதாக தமிழ் புலிகள் கட்சியினர் முற்றுகைப் போராட்டம்.


தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, வடுகபட்டியில் அமைந்துள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு முன்பு, சாதி வன்மத்துடன் ஊராட்சி தூய்மை பணியாளர்களை பணிக்கு வரவிடாமல் தடுக்கின்ற டி.வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ், செயலாளர் வீரபத்ரன், வாட்டர் மேன் நாகராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழ் புலிகள் கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த கண்டன,ஆர்ப்பாட்டத்தில், பெரியகுளம் இளம் புலிகள் அணி செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர் தமிழரசு, சின்னமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை அமைப்பு செயலாளர் தேனி தமிழரசி கலந்து கொண்டார். முன்னாள் மாநில நிர்வாகிகள் தலித் ராயன், மகிழவேந்தன், அலெக்சாண்டர், தனியரசு, சுப வீரபாண்டியன், இளந்தமிழன், டி. வாடிப்பட்டி கிளைச் செயலாளர் காளிமுத்து, ஆகியோர் கலந்து கொண்டு டி.வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விஜயமாலா ஆகியோரை கண்டித்து, கோஷங்களை எழுப்பினார்கள்.


பின்பு பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த  உதவி திட்ட அலுவலர் மருதப்பன் அவர்களிடம் தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனை அடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினர் அங்கிருந்து கலந்து சென்றனர். முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  பாதுகாப்பு பணியில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad