தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக் குளம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தீர்மானங்களை பேரூராட்சி செயல் அலுவலர் ஆளவந்தார் வாசித்தார்.
பணி நியமனக்குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், உறுப்பினர்கள் வசந்தா, முருகன், பாண்டி, மைதிலி, ராஜேந்திரன், ஜாகிர் உசேன், கவிதா, தேவகி, முத்துலட்சுமி, முனியம்மா உள்ளிட்ட வார்டு உறுப்பினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வார்டுகவுன்சிலர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை குறித்து கூட்டத்தில் தெரிவித்தனர். வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகளை குறிப்பேட்டில் பதியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோர் உறுதி அளித்தனர்.
No comments:
Post a Comment